5 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு

நத்தம் அருகே ராஜக்காபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய கட்டிடங்களை உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

Update: 2024-12-24 13:14 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காபட்டியில் அங்கன்வாடி மையம் கட்டிடம், சிலுவத்தூரில் நூலக கட்டிடம், கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிபட்டி ஆகிய 4 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம், வேம்பார்பட்டி மற்றும் சாணார்பட்டியில் நியாய விலை கடைகள், கொசவபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கூவனூத்து குரும்பபட்டியில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடம் உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். வேம்பார்பட்டியில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தபின் அங்கிருந்த குடிமைப் பொருட்களை சோதனை செய்தார். பொருட்கள் அனைத்தும் சரியாக வருகிறதா என விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.

Similar News