திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 5 பேர் படுகாயம்!
திருப்பத்தூர் அருகே இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில்-5 பேர் படுகாயம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:37 GMT
திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் 5 பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில்-5 பேர் படுகாயம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் தனியார் பள்ளி அருகில் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த புவனா (35) அவருடைய பிள்ளைகள் யாசிகா(14) பிரேம் (9) தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த விசுவாசம் பட்டி பகுதியை சேர்ந்த விக்டர் ஜோஸ்வா(18) அவருடைய காதலி ரோஸ் லீட்டா (20) மற்றும் வேணுகோபால் என மூவரும் ஒரே வண்டியில் வந்து கொண்டிருந்தனர். இரண்டு இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து திருப்பத்தூர் கிராம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.