பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது - போலீசார் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 12:25 GMT
வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார் ரவிக்குமார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று பெரிய கண்டியங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் இந்திராநகரை சேர்ந்த சம்சுதீன், வயலூர் பழமலை, வடக்கு பெரியார் நகர் சிவக்குமார், அண்ணாநகர் ராஜசேகர், வடக்கு பெரியார் நகர், திருக்குறள் வீதி திருமுருகன் ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.