50வது ஆண்டு விழா காணும் திருத்தணி அரசு பணிமனை

50வது ஆண்டு விழா காணும் திருத்தணி அரசு பணிமனை;

Update: 2025-01-20 07:24 GMT
திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் இருந்து, 80க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. இங்கு, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணிமனை துவங்கி, நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆனது. இதை கொண்டாடும் விதத்தில் பணிமனை வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். பணிமனை மேலாளர் தேவன் தலைமையில் நடந்த விழாவில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழிற்நுட்ப ஊழியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பானையில் பொங்கல் வைத்து படைத்து வழிப்பட்டனர்.

Similar News