சீர்காழி அருகே 50 ஏக்கர் முந்திரி மரங்கள் எரிந்து நாசம்
சீர்காழி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
Update: 2024-05-31 08:45 GMT
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருந்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த திருமுருகன், மதிவாணன் உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட முந்திரி மரங்கள், பனை மரங்கள் தீயில் கருகி நாசமாயின .இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி, பூம்புகார்,மயிலாடுதுறை உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனங்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்னர்