ஓய்வு பெற்ற காவலர் வீட்டில் 50 பவுன் நகை,ரூ. 2 லட்சம் பணம் கொள்ளை

சீர்காயில் ஓய்வு பெற்ற ரயில்வே போலீசார் வீட்டில் 50 பவுன் நகைகள்,ரூ. 2 லட்சம் பணம் கொள்ளை பரபரப்பு போலீசார் விசாரணை

Update: 2023-12-11 17:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதீனா நகரில் வசிப்பவர் நடராஜன், இவர் ஓய்வு பெற்ற ரயில்வே போலீஸ். இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரு மகள்கள், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வீட்டில் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் இவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்கி உள்ளனர். நேற்று இரவு நடராஜன், அவரது மனைவி, உள்ளிட்ட அனைவரும் கீழ் தளத்தை பூட்டிவிட்டு மேல் தளத்தில் தூங்கி, காலையில் கீழே வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அறைக்கு உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள், ஆடைகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த , 50 சவரன் நகை ,மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, நடராஜன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கொள்ளை போன இடத்தை, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News