நாகையில் வாக்கு எண்ணும் மையத்தில் 500 போலீசார் பாதுகாப்பு

நாகப்பட்டினம் வாக்கு எண்ணும் மையத் தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 11:44 GMT

நாகப்பட்டினம் வாக்கு எண்ணும் மையத் தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


நாகப்பட்டினம் நாட மன்றதொகுதி வாக்கு எண் ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையத் தில் 500 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம் வர்கீஸ் தெரி வித்துள்ளார். அநைாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி யில் நாகப்பட்டினம், கீழ் வேளூர், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப் பூண்டி, நன்னிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 857 ஆண் வாக் காளர்களும், 6 லட்சத்து 87 ஆயிரத்து 181 பெண் வாக் காளர்களும், 82 மூன்றாம் பாலினத்தவர் என மொத்த மாக 13 லட்சத்து 45 ஆயி ரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 19ம் தேதி நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் அமைத்திருந்து 1,551 வாக் குச்சாவடிகளில் வாக்க ளித்தனர். நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 618 ஆண் வாக்காளர்களும், லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் வாக்களித்தனர் ஒட்டு மொத்தமாக 9 லட் சத்து 67 ஆயிரத்து 31 பேர் வாக்களித்துள்ளனர்.

இது 71.89 சதவீதம் ஆகும். தேர்த லில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் நாகப்பட்டினம் செல் லூர் பாரதிதாசன் கலைமற்றும் அறிவியல் கல லூரியில் ஸ்ட்ராங்க் ரூம் அறையில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாது த காப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளு மன்ற தேர்தலில் 7ம்கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக் ரு குப்பதிவு இன்று நடைபெறு கிறது. அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. நாகப்பட்டினம் நாடா ளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர் வாகம் செய்து வருகிறது.

வேட்பாளர்களின் முக வர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் அலுவ லர்கள், தேர்தல் பார்வை யாளர்கள், தேர்தல் நடத் தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என அனை வரும் செல்வதற்கு தேவை யான அனைத்து வசதி களும் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடி வுகளை அறிவிப்பதற்காக ஒலிபெருக்கி வசதிகள், மின்சாரம் தடை படா மல் இருக்க ஜெனரேட் டர் வசதிகள், கழிவறை, குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மற்றும் வேட் பாளர்களின் முகவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசார் ஆகியோர் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள் ளது. பாரதிதாசன் கலைமற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ள சாலை குறு கிய சாலையாக இருப்ப தால் அதை வாக்கு எண் ணிக்கை முடியும் வரை ஒருவழி சாலையாக மாற்ற வும் போலீசார் திட்டமிட் டுள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 42 பேர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வுள்ளனர். அந்த வகையில் 6 சட்ட மன்ற தொகுதிக்கு 252 பேர் ஈடுபடுகின்றனர். இதற்காக 14 மேசைகள் அமைக்கப் பட்டுள்ளது.

இதை தவிர தபால் வாக்குகளை எண் ணுவதற்காக 6 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேசைக்கு 4 பேர் வீதம் 24 பேர் தபால் ஓட்டுக்களை எண்ணும் பணியில் ஈடுப டுகின்றனர். மூத்தகுடிமக் கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீடுகளுக்கு சென்று பதிவாக சர்வீஸ் ஓட்டுகளை எண்ணுவதற் காக 1 மேசை அமைக்கப் பட்டு பதிவாக வாக்குகளை எண்ணும் பணியில் 3 பேர் ஈடுபடுகின்றனர். முதல் சுற்றாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங் கப்படும். இதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒட்டு மொத்தமாக வாக்கு எண் ணும் பணியில் 630 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக் கும் வகையில் 500 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் 90 முகவர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். அதிகபட்ச மாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி 23 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக கீழ்வே ளூர் சட்டமன்ற தொகுதி 15 சுற்றுகளாகவும் எண் ணப்படுகிறது. வாக்கு எண் ணிக்கை மையத்தில் செல் போன், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், புகையிலை பொருட்கள் எடுத்து செல்ல முற்றிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது. வாக்கு எண் ணும் மையத்தை சுற்றி வெடிகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகப்பட்டினம் கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News