மளிகை கடையில் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

ஆத்தூர் அருகே பழைய உடையம்பட்டியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமி 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-21 12:58 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பழைய உடையம்பட்டி பகுதியில் கலியமூர்த்தி மகன் கிருஷ்ணன் என்பவர் மகிழ்மதி மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த மளிகை கடையில் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று காலை கடையை திறப்பதற்காக கிருஷ்ணன் வந்துள்ளார்.

அப்போது கடையின் இரண்டு பூட்டுக்களும் உடைக்கப்பட்டு கடை திறந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் உதவியுடன் உள்ளே சென்று பார்க்கும் பொழுது கடையில் நேற்று இரவு வைத்திருந்த தொகை 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News