ஆர்.கே.பேட்டை அருகே 54 வீடுகள் இடித்து தரை மட்டம் 

ஆர்.கே.பேட்டை அருகே  54 வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

Update: 2024-07-04 16:10 GMT

இடிக்கப்பட்ட வீடுகள்

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் மலைக்கு அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு  ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தி 100க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 

இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. இடத்தில் பயனாளிகள் பல ஆண்டுகளாக வீடு கட்டிக் கொண்டு குடியேற முடியாமல் காலி மனைகளாக விட்டு வைத்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர்,

இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது. அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இருப்பினும் சிலர் கூரை மற்றும் சிமெண்ட் சீட் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் பயனாளிகள் மனு வழங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில்,

200க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுது தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்திய சம்பவம்  ஆர்.கே.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News