ஓசூர் மாநகராட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழா : 500 மரக்கன்றுகள் நடல்

ஓசூர் மாநகராட்சியின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Update: 2024-03-01 12:44 GMT

மரக்கன்று நடல் 

ஓசூர் மாநகராட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஓசூர் அந்திவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர் பூங்கா, ஆவலப்பள்ளி புதிய கழிப்பறை வளாகம், பாரதியார் நகர் பள்ளி, பாலாஜி நகர் - நகர் நல மையம், சின்ன எலசகிரி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 21 இடங்களில் இன்று 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஓசூர் சின்ன எலசகிரி மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்கும் வகையில் WASTE MASTER PRO என்ற அப்ளிகேஷனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

மேலும் குப்பைகளை தரம் பிரித்தலுக்கான விழிப்புணர்வு பாடலையும் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியின்போது பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமை மற்றும் மரங்கள் வளர்ப்பு குறித்த பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News