6 கிலோமீட்டர் தூரம் பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தேவதானத்திலிருந்து மேட்டுக்கோட்டகம் வழியாக செல்லும் இடையூறு சங்கேந்தி சாலை சீரமைக்க கோரிக்கை;

Update: 2025-08-20 00:59 GMT
திருத்துறைப்பூண்டி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சியில் சோத்திரியம்,பின்னத்தூர், ஒட்டங்காடு,செருப்பனையூர் மேட்டுக்கோட்டகம் உள்ளிட்ட 10கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பொதுமக்கள் தேவதானத்தில் இருந்து எடையூர் சங்கேந்தி வரை 6 கிலோ மீட்டர் தூரம் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் மாணவர்கள் தினம்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News