குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 6பேர் கேரளாவில் மீட்பு

குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 6பேர் கேரளாவில் மீட்கபட்டது.

Update: 2024-05-07 15:02 GMT
இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மரிய டேனிஸ் (38), ராமநாதபுரம் மாவட்டம் நித்திய தயாளன் (30), கலைதாஸ் (45), அருண் தயாளன் (27) வாலாந்தருவையை சேர்ந்த ராஜேந்திரன் (30) பாசி பட்டினத்தைச் சேர்ந்த முனிஸ்வரன் (37) ஆகிய ஆறு மீனவர்கள் ஈரானுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக படகில்ல் புறப்பட்டனர். அங்கிருந்து 14 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்து இறுதியில் இந்திய கடல் பகுதி கேரளா ஆழ்கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர்.       அப்போது அவர்களின் படகுகள் இருந்த டீசல் முழுமையாக தீர்ந்து விட்டது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றும் படி கேட்டுள்ளார்கள்.       உடனடியாக மீனவர் அமைப்புகள் இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆறு மீனவர்களை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தது.    

இந்திய கடலோர காவல் படை சொந்தமான அனுபவ் என்ற கப்பலில் விரைந்து சென்று நடுக்கடலில் வைத்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்களை மீட்டு கேரள மாநிலம் கொச்சியில் கரை சேர்த்தனர்.     இதை அடுத்து கொச்சின் கடலோர போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்திய கடலோர படைவினருக்கும் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News