சேலம் மாவட்டத்தில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2024-07-02 09:57 GMT

கோப்பு படம் 

சேலம் மாவட்டத்தில் மதுபானம் பதுக்கி விற்பவர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சாமிநாயக்கன்பட்டி புதுகாலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 40), சிவா, சாம்ராஜ் ஆகியோர் அங்கு பதுக்கி வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 18 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதே போன்று சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சாந்தி (57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 79 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரீஸ்வரன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர்.

அங்கு மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வி (70) என்ற மூதாட்டி உள்பட 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 14 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி மொத்தம் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்து 111 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News