62 ஆவது கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி
கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பூங்காவில் 62 ஆவது கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி பெரும் எதிர் பார்புடன் தொடங்கியது;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62 ஆவது மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த வாரம் 24.05.25 அன்று தொடங்கப்பட்ட நிலையில் கோடை விழாவை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று ஏழாவது நாளாக பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ரக நாய்கள் சைபிரைன்ஹஸ்கி , ஜெர்மன் ஷெப்பர்ட், இந்தியன்ஸ் பிக்ஸ்,கோல்டன் ரெட்ரீவர், ஸ்பெயிஸ்மவுட்டன், ராஜபாளையம், ராட்வீலர், சிட்ஷீ, பெல்ஜியம் மவுன்ட், அமெரிக்கன் புல்லி டபர் மேன், கலந்து கொண்டன. இதில் கலந்துகொண்ட நாய்கள் 4 பிரிவுகளில் கீழ் விளையாடு போட்டிகளில் நடைபெற்றது. நாய்கள் கண்காட்சியில் முதல் 3 இடத்தை தட்டி சென்ற நாய்களுக்கு மண்டல இயக்குனர் கால்நடைத்துறை சார்பாக பரிசுகள் வழங்க பட்டது. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டிக்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த ஆர்வதுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.