67 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர், திருவிளையாட்டம், வசிஷ்டாச்சேரி ஆகிய ஊராட்சிகளில் பருவம் தப்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி ஆறுதல் கூறினார். பின்னர், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், இன்று 2039 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவானது ரூ.15 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை, நேற்றைய தினம், பருவம் தவறிய மழையின் காரணமாக நெல்மணிகள் அறுவடைக்கு தயாராக உள்ளவை பாதிக்கப்பட்டிருக்கின்றது. சம்பா சாகுபடி 69 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்து. அதில் 27 ஹெக்டேர் அளவிற்கு பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது. மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுரையின்பேரில், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆய்வு செய்துள்ளனர்இங்குள்ள பாதிப்புகளை கண்டறிந்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீட்டை பொறுத்தவரைக்கும். காப்பீடு நிறுவனங்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். நண்டலாறு பகுதிகளில் தடுப்புசுவர் கட்டவும் ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11.11.2022 அன்று சீர்காழி, கொள்ளிடம் போன்ற இடங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.46 கோடி மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள்.அதேபோல் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுப்பார்கள் என தெரிவித்தார். இவ்வாய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீரகாழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. உமாமகேஷ்வரி , வேளாண்மை துறை இணை இயக்குநர் .சேகர் , சீரகாழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.