ஆத்தூர் : இலவச வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 683 வழக்குகள் தீர்வு
ஆத்தூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் இலவச வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 683 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு 6 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 775 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.;
Update: 2024-03-09 11:20 GMT
ஒருகிணைந்த நீதிமன்றம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சமராச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் இரண்டு அமர்களாக நடைபெற்றது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜராகி பொதுமக்கள் 683 வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு 6 கோடி 57 லட்சத்து 32 ஆயிரத்து 775 ரூபாய் தீர்வு காணப்பட்டதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 22 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் ௯டுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, குற்றவியல் நடுவர் ஒன்றாவது நீதிமன்ற நீதிபதி முனுசாமி, குற்றவியல் இரண்டாவது நீதிமன்ற நடுவர் நீதிபதி அருண்குமார், விரைவு நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் வழக்காடிகளும் நீதிமன்ற பணியாளர்களும் பொதுமக்களும் இலவச வட்ட சட்ட பணிகள் முகாமில் கலந்து கொண்டனர்.