7 அடி நீள பாம்பை உயிருடன் மீட்பு
திண்டுக்கல்லில் கட்டிட பொருட்களுக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீள பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்;
திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் பங்காளி மார்க்கெட் பகுதியில் உள்ளது இங்கு பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் தேடிப் பார்த்து கட்டிட சாமான்களுக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை நீண்ட நேரம் போராடி உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.