சேலத்தில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
Update: 2023-12-18 02:08 GMT
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாநகரில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கந்தவேல் (சூரமங்கலம் கிரைம்), புஷ்பராணி (கொண்டலாம்பட்டி கிரைம்) ஆகியோர் சேலம் சரகத்திற்கும், பழனியம்மாள் (பள்ளப்பட்டி கிரைம்), ராமகிருஷ்ணன் (கிச்சிப்பாளையம்), சிவகாமி (கன்னங்குறிச்சி கிரைம்) பழனியம்மாள் (டவுன் கிரைம்) பாபு (கட்டுப்பாட்டு அறை) ஆகியோர் கோவை சரகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி பிறப்பித்துள்ளார்.