திருச்சியில் புகையிலைப் பொருள்கள் விற்ற 7 கடைகளுக்கு சீல்

திருச்சியில் புகையிலைப் பொருள்கள் விற்ற 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-01-13 14:59 GMT

கோப்பு படம் 

திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினியின் உத்தரவின்பேரில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து காவல்துறையினா், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினா் அடங்கிய கூட்டுச் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற ஜீவா நகா் கடை, கலைஞா் அறிவாலயம் அருகிலிருந்த தரைக்கடை, குடமுருட்டி பாலம் அருகே உள்ள கடை ஆகிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ஒரு கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடா்ந்து, கே.கே. நகா், காந்தி சந்தை, பாலக்கரை, தில்லை நகா் காவல்நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 4 கடை உரிமையாளா்களுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு வழக்கும் பதியப்பட்டது.

மேலும், மேற்கண்ட கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News