சகோதரர்களை வெட்டிய 4 பேருக்கு 7 ஆண்டு சிறை

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பியை கத்தியால் வெட்டிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-06-27 02:14 GMT

 தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 

சேலம் ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கட்டிட தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மகன் சூர்யா (வயது 25), மாயழகன் மகன் அருண் (30). இவருடைய தம்பி ராஜமாணிக்கம் (29), பரமேஸ்வரன் மகன் மஞ்சுநாதன் (33). இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி அருண்குமார், ஜாகீர் சின்னஅம்மாபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அந்த பகுதிக்கு சூர்யா உள்ளிட்ட 4 பேரும் வந்தனர்.

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அருண்குமாரை கத்தியால் தலையில் வெட்டி உள்ளனர். இதை பார்த்த அவரது அண்ணன் அற்புதராஜ் தட்டி கேட்டார். இதையடுத்து அவரையும், அந்த நபர்கள் வெட்டி உள்ளனர். இதில் அண்ணன், தம்பி 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சூர்யா, அருண், ராஜமாணிக்கம், மஞ்சுநாதன் ஆகிய 4 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி நம்பிராஜன் தீர்ப்பு அளித்தார்.

Tags:    

Similar News