திருச்சியில் 70 கிலோ குட்கா பறிமுதல்-2பேர் கைது

திருச்சி தில்லைநகர் அருகே குட்கா கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-15 03:19 GMT

பைல் படம் 

தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் இதயாத் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற காரை போலீசார் சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் ரூ. 55, 000 மதிப்புள்ள, 70 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தும், குட்கா பொருட்களை கடத்தி வந்த ஆழ்வார்தோப்பை சேர்ந்த ஹபிபுதீன்(26) மளிகை கடையில் வைத்து விற்பனை செய்ததாக காஜா மைதீன் வயது (24) ஆகியோரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News