700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.
700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.;
06 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்,பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 06 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 700 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.33.63 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதலிருந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ, மாணவியர்களின் திறன்களை அறிந்து வழிகாட்டுதலுக்காக நான் முதல்வன் என்கின்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஒன்று அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது மற்றொன்று ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது. இந்த இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரம்பப்பள்ளி முதல் அனைத்து பள்ளிகளிலும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம், புத்தக பை, சீருடை போன்ற 13 பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து குழந்தைகளும் சத்துக்குறைவின்றி கல்வி கற்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும். கல்வி எதிர்கால முதலீடு. எதிர்காலத்தில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்காக தற்போது இருந்தே மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுப்பதன் மூலம் எளிதாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. கல்விதான் வாழ்வை மேன்மையடைய செய்யும். தாராபுரம் என்.சி.பி. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 78 மாணவர்களுக்கும், ஐந்து சாலை சந்திப்பு அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 69 மாணவர்களுக்கும். புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 372 மாணவியர்களுக்கும், சி.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 44 மாணவர்களுக்கும் சி.எஸ்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 81 மாணவியர்களுக்கும். கோவிந்தாபுரம் மாணிக்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 56 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் ரூ.33.63 இலட்சம் மதிப்பீட்டில் 700 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி,தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயக்குமார் , திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் , தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம், நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன்,தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சங்கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.