ராசிபுரத்துக்கு கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சேலத்தில் இருந்து ராசிபுரத்துக்கு கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-09 03:54 GMT

பைல் படம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படை அதிகாரியான கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையில் போலீசார் நேற்று சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்

வர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே அல்லிக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 38) என்பது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி ராசிபுரத்துக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News