விழுப்புரம் சரகத்தில் 74 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 74 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-06 03:42 GMT

விழுப்புரம் சரகத்தில் 74 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 74 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரா உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் இளவழகி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கோட்டக்குப்பம் கீதா விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், திண்டிவனம் கலைச்செல்வி கடலூர் திருப்பாதிரிப்புலியூருக்கும், விழுப்புரம் நகர இன்ஸ்பெக்டர் காமராஜ் கள்ளக்குறிச்சி சமூகநீதி, மனித உரிமை பிரிவு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 74 பேர் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த இட மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News