தீவிர வாகன சோதனையில் 75 வாகனங்களுக்கு அபராதம்

திண்டுக்கல் நகர் உட்கோட்ட ASP சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-03 11:27 GMT

வாகன சோதனை

திண்டுக்கல் நகர் உட்கோட்ட ASP சிபின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவிலர், ஆட்டோ சரக்கு, வாகனம் உள்ளிட்ட 75 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News