76 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்..
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 76 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி சமாதானப்புறாக்களை பறக்க விட்டார்..;
நாடு முழுவதும் இன்று 76 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடியேற்றி சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் 285 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 27 பயனாளிகளுக்கு 28 லட்சத்து 56 ஆயிரத்து 70 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.