கெங்கவல்லி அருகே ரூ.82 ஆயிரம் பறிமுதல்
கெங்கவல்லி அருகே ரூ.82 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.;
Update: 2024-04-02 12:02 GMT
பறிமுதல்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பெரியேரி நேற்று பறக்கும் படை அலுவலர் ஞானப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் சரக்கு வாகனத்தில் வந்தவரை சோதனை செய்தனர். சரக்கு வாகனத்தில் வந்தவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சிலம்பரசன் என்பது தெரிய வந்தது. அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ. 82ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.