கேரளாவுக்கு கடத்தப்பட்ட  875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட  875 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட மினி டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-11 04:08 GMT
பறிமுதல் செய்த மானிய விலை மண்ணெண்ணெய்
குமரி மாவட்டத்தில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் உள்ளது.        இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் இருந்து மினி டெம்போ ஒன்றில் மண்ணெண்ணெய் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி செல்வதாக நித்திரவிளை போலீசுக்கு தகவல் கிடைத்தது.   இதை அடுத்து தனிப்பிரிவு ஏற்று ஸ்டாலின், ஏட்டு சௌந்தரராஜன் உள்ளிட்ட போலீசார்  விரிவிளை சந்திப்பு பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 875 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் வாகனத்தை மண்ணெண்ணெயுடன் பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News