நாகை மாவட்டத்தில் 89.70 சதவீத தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய 8201 மாணவ மாணவிகளில் 7356 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-10 12:02 GMT

நாகை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய 8201 மாணவ மாணவிகளில் 7356 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நாகை நாகை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதிய 8201 மாணவ மாணவிகளில் 7356 பேர் தேர்ச்சி இது 89.70 சதவீதமாகும். நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை ஆண்-3988, பெண்-4213 என மொத்தம் 8201 மாணவ, மாணவியர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை ஆண் -3455, பெண்-3901 என மொத்தம் 7356 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண் 86.63 %. பெண்-92.59 % என சராசரி 89.70% . இந்த தேர்ச்சி விகிதம் சென்ற 2023 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 84.41%, சென்ற ஆண்டை விட கூடுதல் தேர்ச்சி சதவீதம் 5.29% நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 95. உதவி பெறும் பள்ளிகள் 9. பகுதி உதவி பெறும் பள்ளிகள்- 8. சிறப்பு பள்ளிகள் 2. சுயநிதிப் பள்ளிகள் 2. மெட்ரிக் பள்ளிகள் -20 என மொத்தம் 136 பள்ளிகள் உள்ளன.

அவற்றில் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள் 19. உதவி பெறும் பள்ளி- 01. பகுதி உதவி பெறும் பள்ளி 1. சுயநிதிப் பள்ளி 01. மெட்ரிக் பள்ளிகள் 09. சிறப்பு பள்ளி - 1, என மொத்தம் 32 பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றுள்ளன. 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் : 1. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம், 2. அரசு உயர்நிலைப்பள்ளி, நாலுவேதபதி. 3. அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பூண்டி வடக்கு. 4. அரசு உயர்நிலைப்பள்ளி, கலசம்பாடி, 5. அரசு உயர்நிலைப்பள்ளி, கள்ளிமேடு, 6. அரசு உயர்நிலைப்பள்ளி, காரப்பிடாகை, 7. அரசு உயர்நிலைப்பள்ளி, மருதுார் வடக்கு. 8. அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னாள், 9.அரசு உயர்நிலைப்பள்ளி, சிறுதலைக்காடு, 10. அரசு மேல்நிலைப்பள்ளி, செம்போடை, 11. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆறுக்காட்டுத்துறை, 12. அரசு உயர்நிலைப்பள்ளி. ஆயக்காரன்புலம் 3. 13. அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்குளம், 14. அரசு உயர்நிலைப்பள்ளி, நாகக்குடையான், 15.அரசு உயர்நிலைப்பள்ளி விழுந்தமாவடி கிழக்கு. 16. அரசு உயர்நிலைப்பள்ளி, மருதூர் தெற்கு, 17.அரசு மேல்நிலைப்பள்ளி, கடினல்வயல். 18. அரசு மேல்நிலைப்பள்ளி, சரபோஜிராஜபுரம், 19. பி.வி. தேவர் அரசு மேல்நிலைப்பள்ளி, கருப்பம்புலம், 20. திரு.அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கீழ்வேளூர், 21. சீதாலெட்சுமி உயர்நிலைப்பள்ளி, குரவப்புலம், 22. கிறிஸ்து ராஜா சிறப்பு பள்ளி, வேளாங்கண்ணி. 23. அகரம் மெட்ரிகுலேசன் பள்ளி, கருப்பம்புலம், 24. அல்-நூர் இந்தியன் மெட்ரிக் பள்ளி, தேத்தாக்குடி, 25. குழந்தை ஏசு மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, தேவூர், 26. நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, நாகப்பட்டினம். 27. புனித பாத்திமா மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளி, திருப்பூண்டி, 28. காயிதே மில்லத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை, 29. ஆர்விஎஸ் பாரத் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம்-3, 30. சாரதாம்பாள் வித்யாஸ்ரம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேத்தாக்குடி தெற்கு, 31. தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம், 32. விக்டரி மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிகுளம் மேற்கு.

Tags:    

Similar News