ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.
Update: 2024-06-14 05:59 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மனைவி ஹெர்சி லைடியல் (61). இவர் சம்பவ தினம் காலை ஆலங்கோட்டையில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் வந்து இறங்கினர். பின்னர் அவர் அங்கிருந்து பார்வதிபுரம் பகுதிக்கு ஒரு மினி பஸ்ஸில் வரை பயணம் செய்தார். பால் பண்ணை சந்திப்பு பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கி தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது, அந்த கைப்பை திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெர்ஸி லைடியல் கைப்பையின் உள்ளே பார்த்தபோது, அதிலிருந்த 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, 4 பவுன் எடை உள்ள 3 காப்புகள் போன்றவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஓடும் பஸ்ஸில் 9 பவுன் நகைகளை திருடி சென்றதாக தெரிகிறது. மேலும் இது குறித்த அவர் நாகர்கோவில், நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.