நாமக்கல்: 9 சவரன் தங்க நகை திருட்டு
நாம்மக்கல்லில் 9 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.25 லட்சம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள பொன்விழா நகரை சேர்ந்தவர் லோக செந்தூர் குமரன். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனஜராக பணி புரிந்து வருகின்றார். இந்த நிலையில் குடும்பத்தினரை கரூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு கடந்த புதன்கிழமை வீட்டை பூட்டி விட்டு லோக செந்தூர் குமரன் அலுவலக வேலை காரணமாக சென்னைக்கு சென்று உள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகைகள், ரூ.1.25 இலட்சம் ரொக்கப்பணம், ஒரு லேப்டாப் திருடப்பட்டததை கண்டு அதிர்ச்சி அடைந்த லோக செந்தூர் குமரன், இது குறித்து நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த நிலையில் அதே தெருவில் மருத்துவர் இன்பசேகரன் என்பவர் வீட்டிலும் ஒன்றரை சவரன் தங்க நகை திருட்டு போயிருந்தன. இச்சம்பவம் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, குற்றவாளிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளைக் கொண்டு, போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.