பத்தாம் வகுப்பு தேர்வில் நீலகிரியில் 90.61 சதவீதம் பேர் தேர்வு

பத்தாம் வகுப்பு தேர்வில் நீலகிரியில் 90.61 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

Update: 2024-05-10 14:08 GMT

மாணவிகள்

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நீலகிரி மாவட்டத்தில் பொதுத்தேர்வை 3378 மாணவர்களும், 3501 மாணவியர்கள் என 6879 பேர் எழுதினார்கள்.

இதில் 2931 மாணவர்கள், 3302 மாணவியர்கள் என மொத்தம் 6233 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.77 சதவீதமும், மாணவிகள் 94.32 சதவீதம் என 90.61 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.79 சதவீதம் அதிகம். நீலகிரி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 26-வது இடத்தை பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 94 அரசு பள்ளிகளில் 2639 பேர் தேர்வு எழுதினர். இதில், 2261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 85.68 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர்.

தற்போது ரேங்க் முறை இல்லை என்பதால் தேர்வு முடிவுகள் வெளியிட்டவுடன் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டு விட்டதால் உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் 22-வது இடம் பிடித்திருந்தது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 26 வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News