நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் 95 வது ஆண்டு விழா

தர்மபுரி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2024-02-16 01:14 GMT

நடுநிலைப்பள்ளி

தர்மபுரி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி பள்ளியில் 95வது ஆண்டு விழா நேற்று இரவு 7 மணியளவில் நடந்தது விழாவிற்கு பள்ளி பொறுப்பு தலைமையாசிரியை ஷமா சுல்தானா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் நாசர் தலைமை வகித்தார்.

6வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முன்னா, 4வது வார்டு கவுன்சிலர் அம்பிகா மாதையன், உருது வட்டார கல்வி அலுவலர் சாகினா கமர், வட்டார கல்வி அலுவலர் ஜீவா, வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் டேக்கிஸ் பேட்டை முத்தவல்லி பாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுரியா பேகம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சையத் ரஹீம், பொருளாளர் முஸ்தாக், நவீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அரசு காஜி பஜ்லே கரீம், தர்மபுரி அரபி கல்லூரி முதல்வர் ஜுபேர், தலைமை ஆசிரியர் சையத் மஜ்கர் பாஷா, சேக் சுபானி, சையத் கபீர் அஹ்மத், காமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் கவுன்சிலர் முன்னா, முன்னாள் கவுன்சிலர் மாதையன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இடைநிலை ஆசிரியர் ரிஸ்வானா நன்றி கூறினார்

Tags:    

Similar News