நாமக்கல் மாவட்டத்தில் 96.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 –ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 96.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-06 11:32 GMT

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 –ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 96.10% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விபரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 –ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8,413 மாணவர்களும் 8,847 மாணவிகளும் என மொத்தம் 17,260 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 7,989 மாணவர்களும் 8,597 மாணவிகளும் என மொத்தம் 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 94.96% தேர்ச்சி மாணவிகளின் தேர்ச்சி 97.17% என மொத்தம் 96.10% தேர்ச்சி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசுப் பள்ளிகளை சார்ந்த மொத்தம் 8,309 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 7,776 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி 93.58 % ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 01 ஆதி திராவிட நல பள்ளியினை சார்ந்த மொத்தம் 96 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 87.50% ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சார்ந்த மொத்தம் 214 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 92.52% ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 1 சமுக நலத்துறைப் பள்ளியினை சார்ந்த மொத்தம் 3 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி 100% ஆகும். 6 அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த 559 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 545 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 97.49% ஆகும். புவியியல், செவிலியர், மனையியல் மற்றும் அரசியர் சார் அறிவியல் 100%, கணினி அறிவியல் 96.76%, உயிரியல் 99.67%, விலங்கியல் 99.50%, கணினி பயன்பாடு 99.31%, வேதியியல் 99.21%, வரலாறு 99.09%, மொழி பாடங்கள் 99.05%, ஆங்கிலம் 98.90%, கணக்கு 98.67%, தாவரவியல் 98.60%, வணிகவியல் 98.57%, இயற்பியல் 98.48%, பொருளியல் 98.12% உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இவ்வாண்டு 14 அரசுப்பள்ளிகள் உட்பட 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. தெரிவித்தார்கள். மேலும் 100 % தேர்ச்சிப்பெற்றுள்ள பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News