ஏஏஏ பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு விழா

விருதுநகர் ஏஏஏ பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-04-27 01:02 GMT

ஏஏஏ பொறியியல் கல்லூரியில் 9-வது ஆண்டு விழா சிவகாசி, ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது ஆண்டு விழா 26.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் திரு சரத்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் செயலாளர் கார்வண்ணன், தாளாளர் முனைவர் கணேசன், துணை செயலாளர் முனைவர். கா. விக்னேஷ்குமார் மற்றும் அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையை சேர்ந்த முனைவர் பத்மநாபன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் சேகர், சென்ற கல்வியாண்டில் கல்லூரி அடைந்துகொள்ள முன்னேற்றம் மற்றும் சாதனைகளை ஆண்டறிக்கையாக வழங்கினார்.

மேலும் அவரது அறிக்கையில், அடுத்தடுத்த இலக்குகளை அடைய கல்லூரிக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என கேட்டுகொண்டார். வாழ்த்துரை வழங்கிய தாளாளர் கணேசன் அவர்கள் மாணவர்கள் நன்கு பயின்றிடும் வகையில் அனைத்து விதமான ஆதரவுகளையும் பஞ்சு ராஜன் அமராவதி அறக்கட்டளை கொடுக்கும் என தெரிவித்தார். சிறப்பு விருந்தினர் திரு சரத்குமார் தனது சிறப்புரையில் பேசியதாவது: அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வாழ்க்கையில் இளைஞர்களாகிய நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆனால் அனைத்தையும் மனக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் காலையில் எழும்பொழுது கண்ணாடியை பார்த்து உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசிக் கொள்ளுங்கள் நம்மால் முடியும் என்ற ஒரு உற்சாகத்தை தினமும் காலையிலேயே உங்களுக்கு உங்கள் மனதிற்கு அளியுங்கள். மேலும் அவர் இந்தியா 2025 ஆம் ஆண்டு அதிகமான இளைஞர்களை கொண்ட நாடாக இருக்கப் போகிறது எனவும் அதிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் பங்கு அதில் மிக மிக முக்கியம் எனவும் கூறினார் பொறியியல் கல்லூரி மாணவர்களால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு கிரியேட்டிவ் மற்றும் இன்வெட்டிவ் solution வழங்க முடியும் எனவே மாணவர்கள் புதியதான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதத்தில் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் தனது சிறு வயதில் இருந்து தனக்கு உடல் ரீதியாக இருந்த பல கோளாறுகளையும் மீறி தான் திரைப்படத்தில் மன உறுதியுடன் நடித்து வருவதாகவும் அதற்கு அதுபோல் மாணவர்களாகிய நீங்களும் மன உறுதியுடன் சவால்களை எதிர்த்து நன்றாக படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்ததாக சிறப்பு விருந்தினர் கல்லூரியின் செய்திமடல்- ஐ வெளியிட அவற்றை கல்லூரி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். கடந்த கல்வியாண்டில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பஞ்சுராஜன் - அமராவதி அறக்கட்டளையின் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 15ஆவது மற்றும் 17வது இடத்தை பிடித்த செல்வி ஹரிணி மற்றும் செல்வி ஹவுசிகா ஸ்ரீ ஆகியோருக்கு அவர்களின் நான்காண்டு கல்வி கட்டணத் தொகை முழுவதுமாக திரும்ப கொடுக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் அறிவு சார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறையினைச் சார்ந்த மாணவ மாணவிகள் ஆடல் பாடல், நகைச்சுவை நாடகம் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் புவனேஷ் நன்றி உரை வழங்கினார்.

Tags:    

Similar News