ஜக்கம்மாள் புரத்தில் 24 வயது பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
ஜக்கம்மாள் புரத்தில் 24 வயது பெண் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
திருச்சுழி பகுதியைச் சார்ந்தவர் ராமலட்சுமி வயது 48 இவருடைய மூத்த மகள் மகேஸ்வரி என்பவரை கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு விருதுநகர் ஜக்கம்மாள் புறத்தை சார்ந்த முனியசாமி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி மதிய 03 மணியளவில் மகேஸ்வரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஐ சிவில் சேர்த்திருப்பதாக மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கு முனியசாமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வருவதற்குள் மகேஸ்வரி உயிர் இறந்து விட்டதாகவும் மகளின் உடலை பார்த்த பின்பு அவருடைய தாய் ராமலட்சுமி ஊரக காவல் நிலையத்தில் தனது மகளை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்