பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க முன்னாள் மாணவர்

கோவையில் 25 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர்.

Update: 2024-02-03 15:19 GMT

சீருடையில் வந்த முன்னாள் மாணவர்

கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக இருந்து படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்தது பலரது முகத்தில் நெகிழ்ச்சியும்,பூரிப்பும் காணப்பட்டது.

ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டு அடையாளத்தை,நட்புகளை பாசத்தோடு புதுப்பித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி என்ற கூடுலூரை சேர்ந்த மாணவனர் கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக அன்றைய காலகட்ட பள்ளி சீருடையான  காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடையில் அமர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிகழ்வில் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டி தற்பொழுது இருக்கக்கூடிய காலச் சூழ்நிலைக்கேற்ப விழுப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக இது போன்ற மாணவர்கள் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நல பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவில் நின்ற நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டு பல்வேறு நற்செயல்களையும் பாராட்டி பேசினர்.

மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்துகொள்ள வேண்டும் என் உணர்வு பூர்வமாக பேசி முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News