சுரண்டை அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் பலி
சுரண்டை அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-10 11:49 GMT
கோப்பு படம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அருகே உள்ள குலையநேரியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவசக்தி (14). இவர் இன்று தனது உறவினரான மகாலிங்கம் என்பவருடன் கட்டிடம் கட்டுமான பணியை பார்த்து கொண்டு இருந்தாராம்.
அந்தப் பகுதிகளில் திடீரென்று மழை கொட்டி தீர்த்தது அப்போது திடீரென அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார், தகவலறிந்த சுரண்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.