லாரி மீது பேருந்து மோதி விபத்து

விக்கிரவாண்டியில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தை போலீசார் வழக்கௌப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2024-06-08 04:51 GMT

விக்கிரவாண்டியில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தை போலீசார் வழக்கௌப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த ராஜா (வயது 38) என் பவர் ஓட்டினார். அதிகாலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சித்தணி பகுதி யில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பிளாஸ்டிக் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது எதிர் பாராதவிதமாக பஸ் மோதியது.

இதில் டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட் டது. இருப்பினும் பஸ் மோதியதால் லாரியின் பின்பகுதி சேதமடைந்ததோடு, லோடு ஏற்றிருந்த கெமிக்கல் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த அப்துல் ரஜீத் (30), முதுகுளத்தூரை சேர்ந்த ராஜசேதுபதி (34), சிவகங்கையை சேர்ந்த அருண்ராஜ் மனைவி கீதா மத்ரீன் (52), இவருடைய மகன் ஆகாஷ் ராஜ் (21), சென்னை ஓட்டேரியை சேர்ந்த இந்து மதிராணி (46) உள்பட 15 பேருக்கு காயம் ஏற் பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச் சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீர்செய்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News