துறையூர் அருகே திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கெம்பியம்பட்டியில் திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்தனர்.;

Update: 2024-05-19 11:19 GMT
துறையூர் அருகே திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

விபத்துக்குள்ளான பேருந்து

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நாச்சியாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சத்யராஜ்.இவருக்கும் துறையூர் அருகே உள்ள சொக்கநாபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் இன்று நடைபெற உள்ளது.

இதையடுத்து முருகேசன் தனது உறவினர்களுடன் பெண் அழைப்பிற்க்காக தனியார் பேருந்து ஒன்றில் நாச்சியார்புதூர் கிராமத்திலிருந்து சொக்கநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பேருந்து துறையூர் அருகே உள்ள கெம்பியம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர் தகவலறிந்த ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News