பயணிகளை திண்டாடவிடும் பஸ் ஸ்டாண்ட்
பயணிகளை திண்டாடவிடும் பஸ் ஸ்டாண்ட்
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 09:02 GMT
ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழையும் வழியை மாற்றாமல் இருப்பதால் பஸ் பயணிகள் வெயில், மழையில் நனைந்து காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் நடுப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ளூர் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களும், மேற்குப் பகுதியில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.
ஒரு நாளைக்கு 600க்கு அதிகமான பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.தற்போது கிழக்கு பகுதியில் பஸ்கள் நுழைந்து மேற்குப்பகுதியில் வெளியேறுகின்றன. இந்த முறையை மாற்றி அமைத்து மேற்குப் பகுதியில் பஸ்கள் நுழைந்து கிழக்குப் பகுதியில் வெளியே செல்லும்படி அமைக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் சிரமமின்றி பஸ் ஏறுவதற்கு வசதியாக இருக்கும் என்கின்றனர்.