1,000 கிலோ குட்கா கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது.

சோழவரம் அருகே 1,000 கிலோ குட்கா கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது.

Update: 2024-04-05 17:11 GMT

விபத்தில் சிக்கிய கார் 

சோழவரம் அருகே உள்ள மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் விஜயநல்லுார் பகுதியில், நேற்று காலை, 11:00 மணிக்கு செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அ

ப்போது சோழவரத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற குஜராத் மாநில பதிவு எண் கொண்ட, 'ஸ்விப்ட்' காரை நிறுத்துவதற்காக கைகாட்டினர். போலீசாரை கண்ட அந்த கார், நிற்காமல் வேகமாக சென்று, அங்கிருந்த 'மீடியனில்' மோதி நின்றது. பின் அதிலிருந்த மூன்று பேர், காரை விட்டு அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் பின்தொடர்ந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றபோது, கால்வாய் பாலம் ஒன்றில் இருந்து கீழே குதித்து தப்பினர். மீடியனில் மோதி விபத்துக்குள்ளான காரை கிரேன் உதவியுடன் போலீசார் மீட்டு, சோதனை செய்தபோது, அதில், மூட்டை மூட்டையாய் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,000 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.

Tags:    

Similar News