துறையூா் அருகே நிலத் தகராறில் 4 போ் மீது வழக்கு
துறையூா் அருகே நிலத் தகராறில் 4 போ் மீது உப்பிலியபுரம் போலீஸாா் எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-26 09:57 GMT
வழக்குபதிவு
த. முருங்கப்பட்டியில் வசிப்பவா் ராஜேந்திரன் மனைவி ஜக்கம்மாள். பழங்குடி இனத்தைச் சோ்ந்த இவா் அதே ஊரில் தனது கணவா் குடும்பச் சொத்தில் விவசாயம் செய்தாா். இந்நிலையில் இவரது கணவரின் சகோதரா்கள் ஜக்கம்மாவுக்குத் தெரியாமல் குடும்பச் சொத்தை அதே பகுதியைச் சோ்ந்த தரனுக்கு விற்று விட்டனராம். இதுதெரியாமல் வயலில் வேலை செய்த ஜக்கம்மாளை வயலை விட்டு வெளியேறுமாறு கூறி தரன் உள்ளிட்ட 4 போ் ஜாதிப் பெயரைக் கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பான புகாரின்பேரில் மாவட்டக் காவல் அலுவலக பரிந்துரையில் உப்பிலியபுரம் போலீஸாா் தரன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பத்மநாதன், முகுந்தன், சிவலிங்கம் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.