மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் மீது வழக்கு பதிவு
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-14 13:58 GMT
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி நவரத்தின நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி துர்கா. இவர், திருமணத்தின் போது 60 பவுன்நகை, ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை சாமான்கள், ரூ.1 லட்சம் சீதனமாக கொண்டு வந்தார். இந்நிலையில் சங்கர், வேறொரு பெண்ணை 2 வது திருமணம் செய்து, அப்பெண்ணை துர்காவின் வீட்டிற்கே அழைத்து வந்தார். மேலும் இதை கேட்ட துர்காவிற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து துர்கா காரைக்குடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். சங்கர், உஷா உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்