மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!!
மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Update: 2024-02-23 07:29 GMT
மதுரை மாநகராட்சியை பொருத்தமட்டில் 100 வார்டுகள் உள்ளது 100 வார்டு பொதுமக்களுக்கு குழாய்கள் மூலமாகவும் லாரிகள் மூலமாகவும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் குடிநீர் வினியோகம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 87வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருந்த 3,000 லிட்டர் குடிநீரை தனியாருக்கு விற்றதாக புகார் அளிக்கப்பட்டது புகாரில் ஜெயவர்ஷினி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கேசவராம், லாரி ஓட்டுநர் மணிகண்டன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.