அனுமதி இன்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு
பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு முன் அனுமதி இன்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி இவர்கள் மீது வழக்கு பதிவு;
Update: 2024-02-25 11:50 GMT
வழக்கு பதிவு
தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட அருள்மிகு புதூர் மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நாட்களில் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அதுபோல கடந்த ஆண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் நடப்பு ஆண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு பாலக்கோடு காவல்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த கோயில் விழாவில் தடையை மீறி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. பாலக்கோடு காவல்துறையினர் அனுமதி இன்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பனங்காடு முருகேசன் உள்பட 7 பேர் மீது இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.