காதலன் வீட்டில் தர்ணா செய்த பெண்மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்கு
மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏழு வருடம் பழகிய நிலையில் வேறு பெண்ணை மணக்க நினைத்ததால் காதலன் வீட்டு முன் தர்ணா செய்து காதலனை கைது செய்யவைத்த பெண் உட்பட 7நபர்மீது 5 சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 12:03 GMT
காதலன் வீட்டில் தர்ணா செய்த பெண்மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்கு
மயிலாடுதுறை அருகே செங்குடி கிராமத்தில் சுகப்பிரியாவும் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரும் ஏழு வருடங்களாக காதலித்துவந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று முறை கருக்கலைப்பு செய்த காதலன் தற்பொழுது வேறு பெண்ணை மணக்க முயற்சித்த நிலையில் பாதிக்கப்பட்ட சுகப்பிரியா காதலன் வீட்டு வாசல் முன்பாக அமர்ந்து தர்னாவில்ஈடுபட்டார். இது குறித்து அனைத்து மளிர்காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை ஏமாற்றிய வினோத்தை திருமணம் செய்து வைக்கக் கோரி வினோத் வீட்டின் முன்பு தர்ணாவில் அமர்ந்த சுகப்பிரியா மற்றும் அவரது சகோதரர் ஐயப்பன், ரேக்கு துறை, பாலமுருகன், பிரபாகரன் மற்றும் சுமதி ஆகியோர் மீது பெரம்பூர் போலீசார் 147,294(d),448,427,506(ii) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.