6 மாதத்திலேயே சிதறிய சிமென்ட் சாலை

புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை 6 மாதத்திலேயே சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து வருவதால் மின் நகர் பகுதியில் அதிருப்தியடைந்துள்ளனர்.

Update: 2024-06-16 14:28 GMT

6 மாதத்திலேயே சிதறிய சிமென்ட் சாலை

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின்நகரில் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்த இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், மின் நகரினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 2023- - 24ம் பொது நிதியில் இருந்து, முதற்கட்டமாக 100 மீட்டர் நீளத்திற்கு, 6 மாதங்களுக்கு முன், புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் காரணமாக, முதற்கட்டமாக மின் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது. மேலும், கனரக வாகங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதால், வீடுகளுக்குள் உள்ள அனைத்து பொருட்களிலும் துாசு படிமம் போல படிவதாக இப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை 6 மாதத்திலேயே சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து வருவதால் மின் நகர் பகுதியில் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News