பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கும் விழா
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் ஶ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நீர் மோர், பழ ஜுஸ் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Update: 2024-02-21 07:36 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள மிகவும் பழமை மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் ஶ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நீர் மோர், பழ ஜுஸ் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. உடன் செயல் அலுவலர் டார்த்தி கலந்து கொண்டார்.