உடுமலைப்பேட்டை: மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்!
உடுமலைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயமடைந்த நிலையில் விபத்து குறித்து குறித்து உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
உடுமலை ஏரிபாளையம் பகுதியில் சேர்ந்த குருராஜ் இவரது மகன் பிரபு (வயது 12) பிரபு. நேற்று தனது நண்பருடன் மின்வாரிய அலுவலகம் அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின் வாரிய அலுவலக வளாகத்தில் விழுந்தது. அதை எடுக்க பிரபு மரத்தில் ஏறினான்.
அப்போது அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக பிரபு மீது உரசியதில் பலத்த காயங்களும் சிறுவன் அலறியபடி கீழே விழுந்தான்.இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறுவனை அமைத்து சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து உடுமலை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.